அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு – வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும், 330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும், .215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை 150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரண்டு கட்டங்களாக இடம்பெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!
ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|