அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

நாட்டில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டை மீண்டும் திறப்பது பொருளாதாரத்தின் முக்கிய படியாகும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் தற்போதைய தொற்று நோயின் நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகுமொன சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நி...
குடத்தனையில் விபத்தில் - ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்!
ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு - நுகர்வோர் விவகார அதிக...
|
|