அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
Friday, May 7th, 2021
இரத்தினபுரி அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, வரையறுக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தவைக்கப்பட்டது.. தெற்கு அதிவேக பாதையில் கஹதுடுவ இடைமாறல் பாதைக்கு அருகில் ஆரம்பமாகும் இந்த ருவன்புர அதிவேப பாதை இங்கிரிய, இரத்தினபுரி ஊடாக பெல்மடுல வரை அமைக்கப்படும்.
73.9 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட குறித்த அதிவேக நெடுஞ்சாலை மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது. 54 பில்லியன் ரூபா செலவில் 30 மாதங்களுக்குள் குறித்த நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ருவன்புர அதிவேக பாதை 2014 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையின் கீழ் முன்மொழியப்பட்;ட ஒரு செயற்றிட்டமாகும்.
இதனிடையே கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடங்கல் இன்றி, முன்னெடுத்துச் செல்வது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


