அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
Thursday, November 17th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(17) காலைமுதல் அதிக பனி மூட்டமான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிகவேக வீதியின் தொடங்கொடையில் இருந்து கெலதிகம வரையிலும், கொட்டாவ பகுதி பிரதேசத்திலும் இவ்வாறு பனி மூட்டம் காணப்படுகிறது.
வீதி பனி மூட்டத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அதிவேக வீதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. ம...
இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் - கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் ந...
கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் - கடன் மறுசீரமைப்பு பேச்...
|
|
|


