அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
Friday, November 17th, 2017
வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த பதவிகளுக்கு இலங்கை அதிபர் சேவை வகுப்பு 11 மற்றும் வகுப்பு 111 ஐச் சேர்ந்த உத்தியியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றும் இ.அ.சேவை தரம் 11, 111 ஐ சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும், இந்த விண்ணப்பப் படிவங்களை வவுனியா வடக்கு வலய கல்வி அலுவலக நிர்வாகப்பிரிவில் பெற்று கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 27.11.2017ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்க கூடியவாறு நேரிலோ அல்லது வலயக்கல்விப் பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு புளியங்குளம் எனும் முகவரிக்கு பதிவுத்தாபாலில் அனுப்பி வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
|
|
|


