அதிபர்கள், ஆசிரியர்கள் ஜூலை 18 -19 சுகயீன விடுமுறையில்!
Thursday, July 11th, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் சேவையிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபான்கொட நேற்று(10) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி எதிர்வரும் 18,19ம் திகதி இருநாட்கள் சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில்!
ஜூலை முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரித்த கொடுப்பனவு!
தேசிய அடையாள அட்டையுடன் TIN-TAX இலக்கமும் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்...
|
|
|


