அதிக விலையில் விற்றால் கடும் நடவடிக்கை : நிதி அமைச்சர் எச்சரிக்கை .!
Sunday, September 18th, 2016
கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை, கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சீனியின் விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி ஒரு ரூபா 75 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனிக்கான விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரியில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஒரு கிலோகிராம் சீனியின் அதிகபட்ச சில்லறை விலையான 95 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்பட மாட்டாதென நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
|
|
|


