அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்தில் 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
Wednesday, April 7th, 2021
இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் புதுவருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த திட்டதில் இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பேருந்துகளும், 21 புகையிரதங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 1,800 தனியார் பேருந்துகளும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் பேரணி!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள்...
|
|
|


