அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
Wednesday, April 17th, 2019
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வேனில் 12 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!
பாலியல் இலஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் - ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்!
அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கையுடன் அதிகபட்ச அபராதம் - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவ...
|
|
|


