அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் – முன்னாள் முதல்வர்!
Tuesday, July 31st, 2018
சபையின் அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் மாறாக அதிகாரிகளை நம்பியிருந்தால் மக்களுக்கான செயற்றிட்டங்கள் தாமதமாகும் நிலையிலேயே சென்றுகொண்டிருக்கம் நிலை உருவாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் சபை அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் துரிதமாக நடைபெறவேண்டுமானால் அதிகாரிகளின் இந் மாநகரின் அதிகாரங்கள் சரியான முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.
அதிகாரிகள் சிலர் ஒவ்வொரு செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கும் போது தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயற்படவே செய்வார்கள். ஆனால் நாம் அவ்வாறு இருந்துவிட முடியாது இந்த சபைக்குரிய அதிகாரங்களை சரியான முறையில் பிரயோகித்து தடைப்பட்டுபோகும் செயற்றிட்டங்களை எல்லாம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். எனவே நாம் மக்களுக்காக சேவையாற்றுவதற்காகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மக்களின் நலன்கள் பாதிக்காத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் துரிதமாக முன்னெடுக்க உழைக்கவேண்டும் என்றார்.
Related posts:
|
|
|


