அதிகாரங்களும் மற்றும் வரப்பிரசாதங்களுடன் 50 கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அதிகாரங்களும் மற்றும் வரப்பிரசாதங்களுடன் 50 கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் குறித்த கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கத் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு இரண்டு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனங்களின் போது கட்சி பேதம் பார்க்கப்படாது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றையும், மாவட்டம் முழுவதிலும் பயணங்களை மேற்கொள்ள எரிபொருளும் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் கண்காணிப்புதற்கு பூரண வசதிகளுடன் கூடிய காரியாலயம் மற்றும் அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளது.இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரங்களையும் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாணத்தில் அன்டிஜன் பரிசோதனை!
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
|
|