அதிகரிக்கும் வட்டி வீதம் – இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வீதம் ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டை கடுமையாக்குவது அவசியம் என்று கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மக்கள்குடிநீரைப் பெற்றுக்கொள்வதில சிரமம்!
அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!
மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில...
|
|