அடையாள அட்டை பெற 100 ரூபா – அமைச்சர் எஸ்.பி நாவின்ன !

Friday, August 10th, 2018

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மேலதிகமாக 100 ரூபா அறிவிடப்பட உள்ளது.

Related posts: