அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
Friday, April 26th, 2019
முல்லேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத மூன்று பேர் இரு மோட்டார்சைக்கிள்களில் வந்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!
வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை O/L மாணன்!
மீண்டும் கடும் மழைக்கு சாத்தியம்!
|
|
|


