அடுத்த வாரம் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் உள்வாங்ககும் நேர்முகத் தேர்வு !

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவுக்கான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளது. இம்முறை நேர்முகத் தேர்வு தேசிய மட்டத்தில் நடைபெறும் என்றும் இதற்கென சுமார் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். ஆரம்ப பிரிவுக்கான ஆசிரியர் பயிற்சிக்கு கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
ஜனாதிபதி கோரிக்கை: இலங்கைக்கு அரிசி வழங்க இந்தோனேசியா தீர்மானம்!
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
கடந்த ஆட்சியாளர்கள் கடன் பெற முடியாமல் பணத்தை அச்சிட்டனர் - அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு...
|
|