அடுத்த வாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகுறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Sunday, November 27th, 2016
வரவு செலவுத் திட்டத்தினூடாக விலை குறைப்பிற்கு ஏற்ப 07 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயறு ஒரு கிலோகிராம் 15 ரூபாவாலும் பருப்பு ஒரு கிலோகிராம் 10 ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, உருளை கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி ஆகிய பொருட்கள் 5 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 2 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரியாயு 25 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:
புலம்பெயர் தேச இலங்கையர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...
|
|
|


