அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021

நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்த வாரம்முதல் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் - நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய...
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை - அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!
உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது - வளிமண்டலவியல் திணை...