அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021

நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்த வாரம்முதல் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்கள் பாவனை...
மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
வெப்பமான காலநிலை - பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண...

இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிர...
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் ப...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் - பொலிஸார் தெரிவிப்பு...