அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை – 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு!
Saturday, July 9th, 2022
அடுத்தவாரமும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் விடுமுறை அடுத்த வாரமும் நீடிக்கும் எனவும், எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


