அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, August 9th, 2022

பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதுடன், மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வேலைத்திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதுடன், அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts:

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் ப...
இயந்திரம் பழுது - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் - மீளவும் தமிழகத்திற்க...
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் இலங்கை உள்ளிட்ட மூன்று ...