அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
Sunday, December 10th, 2023
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பண தொகை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
திறைசேரியின் இணக்கப்பாட்டுக்கு அமைய பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த முன்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
திடீரென அதிகரித்த மின் அழுத்தத்தால் பெறுமதிமிக்க பொருட்கள் அழிவு – நவாலி தெற்குப் பகுதியில் சம்பவம்!
ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மஹிந்த ...
ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் - 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு தங்கம்...
|
|
|


