“அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

“அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த நாடாளுமன்றத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக மாகாண சபைகளைப் பலப்படுத்துவது குறித்தும் ஆராய்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுளு்ளார்.
ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|