அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே பொதுஜன பெரமுனவின் கடமை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக சட்டத்தை மீட்டெடுத்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் ஒவ்வொரு பொதுமக்களும் தாங்கள் வாக்களிக்கும் அரசியல் கட்சியின் வரிக் கொள்கை மற்றும் கடந்த கால பொருளாதார நடைமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்தல்கள் நெருங்க நெருங்க, மக்களை ஏமாற்றும் வகையில் கண்மூடித்தனமாக பல்வேறு திசைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
000
Related posts:
மக்களது நம்பிக்கைகள் கலைந்துபோக இடமளிக்க போவதில்லை- ஜனாதிபதி
செயற்கை முட்டை பாவனையில் - உடன் முறையிடுமாறு மக்களிடம் கோரிக்கை!
விமர்சனங்கள் எனது பணியின் அளவுகோல் அல்ல - விஷேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|