அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் – அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!
Wednesday, October 11th, 2023
அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். அதேவேளை அரசியல் எனக்கு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. அத்துடன் அழைப்புகள் வந்தாலும் அதனை ஏற்கும் நிலையில் இல்லை எனவும் அலிசப்ரி தெரிவித்தார்
அதேவேளை எனது தொழில்சார் நடவடிக்கையை முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசியலுக்கு வந்து ஒரு சதம்கூட சம்பாதித்தது கிடையாது. அதற்கான தேவைப்பாடும் எனக்கு இல்லை.
எனது குடும்பத்தாரும் நான் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. நெருக்கடியான நேரத்தில் நாட்டைவிட்டு செல்ல முடியாது. அதனால்தான் நெருக்கடியான காலகட்டத்தில் நிதி அமைச்சு பதவியைக்கூட ஏற்றேன். மே 9 ஆம் திகதிக்கு பிறகு அரசியல் முழுமையாக வெறுத்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


