அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!
Monday, May 17th, 2021
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சீனா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது –
சீனாவின் தூதர் குய் ஜென்ஹோங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் இது தொடர்பில் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வரும் நாட்களில் சில முக்கியமான முன்னேற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் சீனத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
சீனாவில் இருந்து மேலும் 3 மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெறப்போவதாக ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் மற்ற மாகாணங்களில் தடுப்பூசி திட்டங்களைத் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே சீனா இதுவரை இலங்கைக்கு ஆறு இலட்சம் குப்பி சினோர்பார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


