அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023

அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த சில வருடங்களில் பணவீக்கம் குறைவடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், பணவீக்கம் குறைவினால் பொருட்களின் விலை குறைவதில் பாதிப்பு உள்ளதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் குறைவடைதல் ஊடாக பணவீக்கத்தின் நிலைமையை தீர்மானிக்க முடியாது. பணவீக்கம் கூடுவதும், குறைவதும் நீண்ட கால தொழில்நுட்ப சூழ்நிலை என்றும், அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்க 12% முதல் 15% வரை இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: