அடுத்தமாதமளவில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!
Saturday, June 19th, 2021
இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்தமாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது இருப்பில் உள்ள தடுப்பூகளைக் கொண்டு அதிகளவில் ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஜனவரி 29 ஆம் திகதிமுதல் ஜுன் 17ஆம் திகதி வரையில் 2.39 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் செலுத்துகை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


