அடிப்படை வசதிகள் இன்றி வெளிமாவட்ட அரச பணியாளர்கள் – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு!
Sunday, August 19th, 2018
அரச பணியாளர்கள் வெளிமாவட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படும்போது பணியைத் தொடர்வதாகப் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மாந்தை கிழக்கில் உள்ள அரச பணியகங்கள் மற்றும் திணைக்களங்களில் பணியாற்றுகின்ற வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த அரச பணியாளர்களுக்கான போக்குவரத்து, விடுதி மற்றும் உணவகங்கள் வசதி இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரச பணியாளர்கள் அந்தந்தத் திணைக்களம் ஊடாக தங்கள் குறைகளை சுட்டிக்காட்டி அது தொடர்பிலான அறிக்கைகள் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சமர்பித்தால் அதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்படும்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால்கள் மாங்குளத்தில் இருந்து எடுத்துச் செல்வதற்கு வாகனம் ஒன்று தேவை. அதனைப் பெற்றுக்கொடுக்க அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
Related posts:
|
|
|


