அஞ்சல் வாக்களிப்புக்கான இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, July 24th, 2020

அஞ்சல்மூல வாக்களிப்பை செலுத்த முடியாது போனவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்த முடியும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை அஞ்சல்மூல வாக்களிப்பை செலுத்த முடியாத அரச பணியாளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக கொரோனா தொற்றாது என உறுதியளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பியின் யாழ் மா...
அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது பொது நிர்வாகம் மற்...
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அனுப்பிய பரிசு!