அச்சிடும் பணிகளில் முறைக்கேடுகள் இடம்பெறவில்லை – பாடப்புத்தக சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சர் !

Tuesday, July 2nd, 2019

பாடப்புத்தக அச்சிடும் பணிகளில் முறைக்கேடுகள் இடம்பெறவில்லை என்பதை தாம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருப்பதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாடப்புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் புகைப்படம் பதிக்கப்படுவதன் காரணமாக பணம் வீண் விரயம் செய்யப்படுவதாக குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதில் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கினார்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதற்கு முந்திய காலத்திலும் முன்னாள் கல்வி அமைச்சர்கள், கல்வி அமைச்சின் செய்தியாக பாடப்புத்தகங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்தியை அச்சிட்டிருப்பதாக கூறினார்.

இதன்மூலம் எந்த அளவுக்கு வீண் செலவு இடம்பெறவில்லை என்று ஆதாரப்பூர்வமாக தாம் நிரூபித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு முதல்கட்டமாக டெப் கணினிகள் வழங்கப்படும் நடவடிக்கைகள், பின்னர் இரண்டாம் மூன்றாம் கட்டங்களில் அனைத்து பாடசாலைகளுக்கும் விஸ்கரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: