அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, July 7th, 2017

உமாஒய அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மஹாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய சகல தரப்பினருடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உமாஓய செயற்றிட்டத்திற்கான அகழ்வு நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுரங்க பாதையில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தை எதிர்வரும் பத்து நாட்களில் அகற்றி விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உபகரணம் விமானம் மூலம் எடுத்து வரப்படவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இது தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே நிபுணர்களும் இலங்கை வரவுள்ளார்கள்.உமா ஓய திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தற்சமயம் 300 மில்லியன் ரூபா பதுளை மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: