ஃபைசர் தடுப்பூசிகளின் ஒரு தொகை நாட்டை வந்தடைந்தன!

இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியின் 26,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
தடுப்பூசி அளவுகளின் அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டதாகவும், கட்டாரின் தோஹாவிலிருந்து அவை கட்டார் ஏயர்வேஸ் விமானத்தின் மூலமாக அதிகாலை 2.35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதன் பின்னர் தடுப்பூசி அளவுகள் குளிரூட்டல் வசதிகளுடன் கூடிய லொறிகளில் அரச மருந்துகள் கூட்டுஸ்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன
Related posts:
மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவேன் - பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
இலங்கையில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு – குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வ...
|
|