G 7 இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Saturday, June 4th, 2016

உலகில் பொருளாதார ரீதியில் பலமிக்க 07 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற G 7 மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு கிடைத்தமை இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தகவல் திணைக்களத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்கின்ற சிறந்த நடவடிக்கைகளின் ஊடாக அவருக்கு சர்வதேசத்தில் பாரிய வரவேற்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்..

2006ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சென்றிருந்த அந்தக் காலத்தில் வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்திப்பதற்கு சங்கடமாக இருந்ததாகவும் தற்போது அந்த நிலை மாறுபட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் பலமிக்க நாடுகளுக்கு எமது நாட்டினால் பாரிய பொருளாதார பிரதிலாபங்கள் ஏற்படப் போவதில்லை என்பதுடன், இலங்கை போன்ற நாடுகளுக்கு, பொருளாதார ரீதியில் பலமிக்க நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

சுயாதீன நாடாக இலங்கை நட்பு ரீதியான வெளிநாட்டு கொள்கை ஒன்றை பின்பற்றுவதாக கூறிய அவர், அதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்திற்கு அடிபனிந்து இந்த நாட்டை நிர்வகிப்பதற்கு தயாரில்லை என்றும் கூறினார்.

Related posts: