FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !
Thursday, January 19th, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்ன கடமையாற்றி வந்தார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்னவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம் !
FZ மோட்டார் சைக்கிள்களே அதிக விபத்துக்களை ஏற்படுத்திவருகின்றன - யாழ் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத...
|
|
|


