facebook ஊடாக பரவிவரும் புகைப்படங்களின் உண்மை இதோ!

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பரவிவரும் புகைப்படங்களில் இருக்கும் இளைஞர் திடீர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தொடருந்தின் மிதிபலகையில் பயணித்தப்படி தொலைப்பேசியை உபயோகித்துள்ளார்.இதன் போது தொடருந்தில் இருந்து தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து கடந்த 17ம் திகதி மீரிகம கனேகொட தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தில் பயணித்த இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.அவர் யாப்பஹுவ கொன்வேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய கசுன் லக்மால் ஹேரத் என்ற இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
வலி.தெ.மே பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் விபரங்கள் வர்த்தமானியில்!
அச்சுறுத்தல் தொடர்ந்தால் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாது – அமைச்சர் பீரிஸ்!
திருத்த வேலைகள் முடிவுற்று மீண்டும் கடலில் இறக்கப்பட்டது குமுதினி படகு !
|
|