730 ரூபாவுக்கு எதிராக சிதறு தேங்காய் உடைத்து போராட்டம்!

Wednesday, October 19th, 2016

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் நியாயமானது அல்ல என கூறி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் உள்ள ரோத முனி ஆலயத்திற்கு முன்னால் கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டம் இன்று காலை 08மணி முதல் 09 மணி வரை பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம் பெற்றது.

நாங்கள் கடந்த முதலாம் திகதி முதல் நேற்றுவரை தொழிலுக்கு செல்லாமல் நியாயமான சம்பளம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்திலும் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வந்தோம். எனுனும் நேற்றய தினம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் 730 ரூபாவுக்கு இணங்கி கைச்சாத்திட்டுள்ளதாக இம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எங்களுக்கு 18மாதங்களுக்கான நிலுவை தொகை வழங்குமாறு இம்மக்கள் கோரியுள்ளதுடன், தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படுக்கின்ற சந்தா பணத்தினையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இம் மக்கள் தெரிவித்தனர்.

a

Related posts: