67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில்!
Tuesday, July 4th, 2017
இவ்வருடத்தில் இதுவரை 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் இவ்வாறு 61 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பணியகத்தின் முறைப்பாடுகளை விசாரணை செய்ய ஒத்துழைக்காமை, பணியகத்தில் பதிவு செய்யாமல் நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், போலி ஆவணங்களை முன்வைத்தல், வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழியர்களை அனுப்பாமை போன்றவை இந்த தடைப்பட்டியலில் சேர்க்க காரணமா உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!
இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமை...
|
|
|


