6000 சீனப் பணியாளர்கள் இலங்கையில்!
Friday, May 25th, 2018
6000 இற்கும் அதிகமான சீனர்கள் நாட்டில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான் தெரிவித்துள்ளார்.
இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதிலேயே பெரும்பாலான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் வானுயர்ந்த கட்டடங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளிலேயே சீனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் தொடர்புடைய சீன நிறுவனங்கள், சீனப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தங்கம் கடத்த முயன்ற வெளிநாட்டவர் கைது!
பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!
|
|
|


