சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!
Tuesday, June 23rd, 2020
ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த பரிசோதனைகளுக்காக 65 டொலர் பணம் அறிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
PCR பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களில் கிடைக்கும் வரையில் வெளி நாட்டவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும். அதற்கமைய கொரோனா தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டால் சுற்றுலா பயணங்களுக்கு குறித்த பயணி அனுமதிக்கப்படுவார்.
எப்படியிருப்பினும் அந்த சுற்றுலா பயணிக்கு 5 நாட்களின் பின்னர் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களின் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் இருவரது கடவுச்சீட்டு முடக்கம்!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவா...
அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபி...
|
|
|


