52,000 பேர் இந்த ஆண்டில் கைது!

Monday, September 25th, 2017

நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52,000பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரால் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவல்களுக்கமைய, போதைப்பொருள் தொடர்பான 52, 157 சம்பவங்களுடன் 52,072 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.கஞ்சா போதைப்பொருள் தொடர்பான 32, 673 சம்பவங்கள் தொடர்பில் 32, 463 பேரும், ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான 19, 434 சம்பவங்கள் தொடரபில் 19, 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 ஆயிரம் கிலோ கஞ்சாவும், 290 கிலோ ஹெரோயினும் இந்த சுற்றி வளைப்புகளின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமாக 220 கிலோ கொக்கேய்ன், 3 கிலோ ஹஷிஸ், 770 மில்லிகிராம் ஒபி முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 27 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.அவர்கள், பாகிஸ்தான், இந்தியா, ப்ரான்ஸ், இத்தாலி, நைஜீரியா, மாலைதீவுகள் மற்றும் லட்வியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்க...
கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள...
பொலிசாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு - பலப்படுத்தப்பட்டது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பா...