50 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள்!
Tuesday, April 18th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (17) 50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் தீர்வின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி 50 ஆவது நாளை முன்னிட்டு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இன்று பிற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வைத்துப் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப் பிரசுரங்களை யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிற்கும் எடுத்துச் சென்று விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறு...
மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை - இராஜாங்க அமை...
நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே அரசாங்கத்...
|
|
|


