5 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து காரைநகர் கடற்பரப்பில் படகொன்றில் வந்து மீன்பிடித்துக் கொண்டிந்த மீனவர்களே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரிடமிருந்து மீனவர்களைப் பொறுப்பேற்று, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மேலும் கூறினர்.
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!
எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது - அமைச்சரவை அந்தஸ்துள...
எரிபொருளுக்கான QR மீள் நிரப்பு முறைமையில் மாற்றம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|