3,700 கோடி டொலர் மசகு எண்ணெய் கடனைச் செலுத்த அரசு இணக்கம்!

ஈரான் இலங்கைக்கு வழங்கியுள்ள மசகு எண்ணெய்க்கான 3,700 கோடி அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த இலங்கை அரசு இணக்கம் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
இலங்கை பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கும், ஈராக் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் டெஹ்ரான் நகரில் நடந்த கலந்துரையாடலின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.ஈரானுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் தேயிலையின் பெறுமானத்தில் இந்தக் கடன் கட்டம் கட்டமாகக் கழிக்கப்படும்.
ஈரானின் மசகு எண்ணெயை சப்புகஸ்கந்த சுத்திரிகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கக்கூடிய வசதிகள் இருப்பதால் அந்நாட்டுடனான மசகு எண்ணெய் இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளதாகவும்,ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்கா விதித்திருந்த தடைச்சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
Related posts:
|
|