32 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலியில்!

32 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலி ஹிக்கடுவையில் இன்று (21) காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது..தென் மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இம்முறை இந்த மாநாடு நடைபெறுகின்றது.நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் தலைவராக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாசெயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இறுதியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் நடைபெறும் முதலாவது
முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும்.இந்த மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு பதிலாக, வடமாகாண விவசாய
அமைச்சின் செயலாளர் கலந்துகொண்டுள்ளார்.
Related posts:
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?
இனி பரீட்சை மேற்பார்வையாளர்களாக அதிபர்கள் !
சாதாரண தர பரீட்சை எழுதிய இருவர் பரிதாபமாக பலி.!
|
|