24 ஆயிரம் ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

Wednesday, April 12th, 2017

24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தவர்களுக்கே இந்த இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 28ஆம் திகதி மேலும் 1,500 ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கத்தால் இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக 2015இல் இருந்து இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது.அத்துடன் எந்தவொரு விண்ணப்ப பத்திரத்துக்கும் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்கு 3 மாதங்கள் தேவைப்படுவதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரட்டைக் குடியுரிமை விண்ணப்பதாரியிடம் கட்டணமாக 3 இலட்சம் ரூபாயும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக தல 50 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: