2018 ஆளுநர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Wednesday, May 23rd, 2018
வடக்கு மாகாண ஆளுநர் விருது 2018 இற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் அதி உச்ச மனிதநேய செயற்பாட்டாளர்களையும் வட மாகாண சமூக அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்டவர்களையும் அங்கீகரித்து வழங்கப்படும் ஆளுநர் விருதுக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இவ் விருதுக்கான பிரிவுகளாக அதி உச்ச மனித நேயம், பொருளாதாரம், பொறியியல், பொதுநிர்வாகம், சமூக சேவைகள், மருத்துவம், சட்டம் மற்றும் வர்த்தகம் ஆகிய பகுதிகளில் விண்ணப்பங்களையும் சிபாரிசுகளையும் தனி நபர்களாகவோ கூட்டாகவோ சிபார்சுக்குரியவர்களின் முழு விபரங்களுடன் தெரிவுக்கு இயலுமான ஆதாரங்களுடன் எதிர்வரும் ஜீன் 10 ஆம் திகதிக்கு முன் பதிவுத்தபாலில் ஆளுநர் விருது 2018 செயலாளர், ஆளுநர் செயகம், வட மாகாணம் சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


