2017 ஆம் ஆண்டு புதிய தவணைக்காக சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் வெளீயீடு!

Wednesday, October 26th, 2016

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் சகல பிரிவெனாக்கள் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக நடைமுறைப்படுத்த வேண்டிய பாடசாலைத்தவணை அட்டவணையினை கல்வி அமைச்சு 12ஃ2016 ஆம் இலக்க சுற்றுநிருபம் மூலம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை 2017 ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, 2017 ஏப்பிரல் 5ஆம் திகதி புதன்கிழமைடி (இரு தினங்களும் உட்பட) நிறைவு பெறவுள்ளது.

2ஆம் தவணை கல்வி நடவடிக்கை 2017 ஏப்பிரல் 26ஆம் திகதி புதன்சிழமை ஆரம்பமாகி 2017 ஆகஸ்ட் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவுபெறவுள்ளது. இதேகோன்று நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் 1ஆம் தவணை பல்வி நடவடிக்கைக்காக 2017 ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, 2017 ஏப்பிரல் 6ஆம் திகதி வியாழக்கிழமை (இரு தினங்கள் உட்பட) நிறைவு பெறவுள்ளது. 2ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கையின் 2ஆம் கட்டம் 2017 ஏப்ரல் 19ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, 2017 மே 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதேவேளை புனித ரமழன் மாத நோன்புக்காக 2017.05.27 ஆம் திகதி தொடக்கம் 2017.06.27ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2ஆம் தவணையின் 2ஆம் கட்டம் 2017 ஜீன் 28ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, 2017 ஆகஸ்ட் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது. 3ஆம் தவணை கல்வி நடவடிக்கை 2017 ஆகஸ்ட் 28ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, 20174 டிசம்பர் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவு பெறவுள்ளது.

Ministry_of_Education-------------------------------------

Related posts: