2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டமும் அதன் சமூக பொருளாதார அரசியல் தாக்கங்களும்” – யாழில் கலந்துரையாடல்!

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் இம்மாதத்திற்கான பௌர்ணமிக் கலந்துரையாடலானது “2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டமும் அதன் சமூக பொருளாதார அரசியல் தாக்கங்களும்” எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (14.) பிற்பகல்- 3.30 மணியளவில் இல-62, கே.கே.எஸ் வீதி கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தொடக்கவுரையினை ஆய்வாளர் நிஜந்தினி கதிர்காமரும், கருத்துரையினை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் மனித வள மேம்பாடும் அபிவிருத்தியும் பிரிவின் முன்னாள் பிரதிச் செயலாளர் சிவசிதம்பரம் கிருஸ்ணானந்தனும் ஆற்றவுள்ளனர். கருத்துரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும். சமூக, விஞ்ஞான, அறிவியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இந்தக் கலந்துரையாடலில் தவறாது கலந்துகொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் கேட்டுள்ளனர்.
Related posts:
|
|