2017இல் கிளிநொச்சி வறட்சியான மாவட்ட்ம் பிரகடனம் செய்யுமாறு நேற்று விவசாய சம்மேளனங்கள் கோரிக்கை!
Wednesday, January 4th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல்கள் அழிவடைவதன் காரணமாக மாவட்டத்தை இந்த ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் மாவட்டச் செயலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மேற்படி கோரிக்கை விவசாய சங்கங்களினால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கிளிநொச்சியில் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அழிவடைவதன் காரணமாக மாவட்டத்தை அந்த ஆண்டு வறட்சியாக மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் இழந்ததில் ஒரு பகுதியையாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.
பருவம் தப்பிய மழையினாலும் தற்போது மழையின்றித் தொடர் வெப்பம் நிலவுவதாலும் வயல்கள் அழிவடைகின்றன. இனியும் மழை வீழ்ச்சி கிடைக்காத சந்தர்ப்பத்தில் பெரிய அழிவை சந்திக்க நேரிடும். மேற்படி காரணங்களை முன்னி;டு எமது மாவட்டதை வறட்சி மாவட்டமாக அறிவிக்க மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts:
|
|
|


