200 கிலோ கிராம் கொக்கேய்ன், சீனிக் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்பு!
Friday, November 25th, 2016
ஒருகொடவத்த கொள்கலன் நிலையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் இருந்து 200 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது.
சீனி ஏற்றப்பட்டதாக தெரிவித்து பேணப்பட்டு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்தே இந்த அளவு கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் அங்குள்ள 16 கொள்கலன்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த போதைப் பொருளுடனான கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப் பொருள் 200 கோடி ரூபாவுக்கும் அதிக சந்தைப் பெறுமதியைக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அதிபர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் வேதனம் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்கப்படும் -...
|
|
|


